விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்து சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?
விஜய் டிவி
சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவிக்கு டப் கொடுக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சூப்பரான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
டாப் 5 என்றால் சன் டிவி தான் என இருந்ததை விஜய் டிவி சீரியல்கள் முறியடித்துள்ளது.
டிஆர்பியில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
மறு ஒளிபரப்பு
பிக்பா1 நிகழ்ச்சி களமிறக்கிய போது சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து சில சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி இருந்தார்கள்.
இப்போது பிக்பாஸ் 9 பொங்கல் நாளில் முடிவுக்கு வரப்போகிறது, இதனால் நிறைய புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

சுட்டும் விழி சுடரே, அழகே அழகு, கண்டேனடி என மொத்தம் 3 சீரியல்கள் விஜய் டிவியில் புதியதாக களமிறங்குகிறது.
இந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சின்ன மருமகள் சீரியலை மறு ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.