ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... ரசிகர்களே தயாரா?
ஜீ தமிழ்
சினிமா ரசிகர்களுக்கு படங்கள் குறித்து தகவல் வருகிறதோ இல்லையோ சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் குறித்து நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன.

கார்த்திகை தீபம்
விரைவில் ஜீ தமிழில் வாகை சூடவா என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. வரும் திங்கள் முதல் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதில் கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் இர்பான் நாயகனாக நடிக்க பவித்ரா நாயகியாக நடிக்கிறார். இந்த புதிய சீரியலின் புரொமோக்கள் சில வெளியாகிவிட்டது.

தற்போது வேறொரு குட் நியூஸ் என்னவென்றால், கார்த்திகை தீபம் சீரியல் குறித்து தான். வரும் திங்கள் (ஜனவரி 19) முதல் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் கார்த்திகை தீபம் சீரியல் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை என 1 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த தகவல் வந்ததுமே ரசிகர்கள் அனைவரும் Waiting Waiting என பதிவிட்டு வருகின்றனர்.