மகாநதி சீரியல் ரசிகர்களே இந்த குட் நியூஸ் பற்றி தெரியுமா?... குவியும் வாழ்த்து
மகாநதி
இளம் கலைஞர்கள் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் சீரியல் பக்கம் சென்றாலே இந்த சீரியல் ரசிகர்கள் தான் ராஜ்ஜியம் செய்கிறார்கள்.
இதில் விஜய்-காவேரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோடிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
ஸ்பெஷல்
இப்போது கதையில் கங்கா வளைகாப்பு பெரிய பிரச்சனையோடு நடந்து முடிந்துவிட்டது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் தற்போது குமரன் மலேசியா சென்று வேலை செய்ய முடிவு எடுத்துவிட்டார்.
இதற்கு இடையில் பசுபதி, காவேரியை கொலை செய்ய முயற்சி செய்ய விஜய் எப்படியோ காப்பாற்றி விடுகிறார். தொடர் அடுத்தடுத்து பரபரப்பாக செல்ல தற்போது ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அது என்னவென்றால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த மகாநதி சீரியல் 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.