பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரசிகர்களுக்கு வந்த சூட் நியூஸ்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், பாண்டியன்-கோமதி என்ற அழகிய ஜோடியின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோட் கதையில், புதியதாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வர கோமதி மற்றும் பாண்டியன் அவரது நிலைமை கண்டு வருத்தப்படுகிறார்கள்.

அடுத்து மயில் CheckUpற்காக மருத்துவமனை தனியாக செல்கிறார். அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் கோமதி வருகிறார். பின் மயிலுக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாம் எடுக்கப்படுகிறது, குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
அடுத்து கதிர் மற்றும் ராஜி வாக்கிங் செல்ல அந்த நேரம் எதிரே குமாரு வருகிறார்.

அவர் கதிரை பார்த்ததும் என் பெரியப்பாவை உன் வலையில் சிக்க வைத்துவிட்டாய், அப்படியே என் வீட்டிற்குள் வந்து சொத்தை ஆட்டைய போட திட்டம் போட்டுள்ளாயா என என்னென்னமோ கூறுகிறார். கதிரிடம் குமாரு சண்டைக்கு செல்ல ராஜி தடுத்து அவர் தனது அண்ணனிடம் சண்டை போடுகிறார்.

குட் நியூஸ்
நாளைய எபிசோடின் புரொமோவில், மயிலுடன் நீங்கள் செக்அப் சென்றீர்களா என சரவணன் தனது அம்மாவிடம் கோபப்படுகிறார்.

கோமதி 5 புள்ளையை பெற்றவள், ஒருவர் கூட இல்லாமல் மருத்துவமனை செல்வது கஷ்டமான விஷயம். பிரசவம் வரை கண்டிப்பாக நான் அவளுடன் செல்வேன் என்கிறார், அதைக்கேட்டு சரவணன் கோபமடைகிறார். கதை பிரச்சனைகளோடு செல்ல ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி 800 எபிசோடை எட்டியுள்ளதாம். ரசிகர்கள் புதிய டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.