செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி.. இனி செம கொண்டாட்டம் தான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல், ஒரு காலத்தில் TRPயில் முன்னணியில் இருந்தது.
இந்த சீரியலில் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்து வர, பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார்.
ஆதி, பார்வதியின் காம்போவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து வெளியேறினார்.
கார்த்திக் ராஜ் வெளியேறிய காரணத்தினால், சீரியலின் TRP கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
இந்நிலையில், TRP மீண்டும் உயர்த்த செம்பருத்தி சீரியலை மீண்டும் முதல் எபிசோடில் இருந்து ஒளிபரப்ப ஜீ தமிழ் சேனல் முடிவு செய்து இருக்கிறது.
அதனால், ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்த காட்சிகளை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.