சன் டிவியின் கயல் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல். சைத்ரா மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இளம் வயதிலேயே அப்பாவை இழந்த தனது குடும்பத்தை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டு குடும்பத்திற்காகவே வாழ்பவர் கயல். இப்போது கதையில் பரபரப்பான கதைக்களம் என்னவென்றால் எழில் மற்றும் ஆட்டோ காரரின் பிரச்சனை தான்.
அந்த ஆட்டோ ஓட்டும் நபர் தனத்தின் தம்பி என்பது சமீபத்தில் தான் காட்டப்பட்டது, இது இன்னும் எழிலுக்கு தெரியாது.

ஸ்பெஷல்
கதைக்களம் இப்படி பரபரப்பாக செல்ல கயல் சீரியல் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது கயல் சீரியல் தொடங்கப்பட்டு 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது தொடர் 1300 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இந்த விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.