ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ... நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது.
அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேற்று, ஏப்ரல் 10 செம மாஸாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மட்டுமே ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது இப்படம்.
படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சில ரசிகர்கள் த்ரிஷா இந்த படத்தில் டம்மியாக வந்து சென்று இருப்பதாகவும் அவருக்கு சரியான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.
நடிகை பதிவு
இப்படி ஒரு நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில், சமூக வலைதளங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்?
நன்றாக தூங்குகிறீர்கள்? பெயர் தெரியாத கோழைகளே God Bless You என பதிவு போட்டுள்ளார்.