கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள்! விஜய்க்கு எந்த இடம் தெரியுமா? ஆனால் அஜித்..
தமிழ் சினிமாவில் வசூல் கிங்காக இருந்து வரும் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். மேலும் விஜய் பற்றி ஒரு சின்ன செய்தி வந்தால் கூட ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள்.
இந்நிலையில் googleல் 2022ல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் லிஸ்ட் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் விஜய் 22ம் இடம் பிடித்து இருக்கிறார்.
BTS பிரபலம் வி தான் நம்பர் 1 இடத்தினை பிடித்து இருக்கிறார். சல்மான் கான் 11வது இடமும், ஷாருக் கான் 12ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 19ம் இடம் பெற்று இருக்கும் நிலையில், விஜய்க்கு 22ம் இடம் தான் கிடைத்து இருக்கிறது.
நடிகைகளில் கத்ரினா கைப் (7ம் இடம்), ஆலியா பட் (8ம் இடம்), காஜல் அகர்வால்(15ம் இடம்), சமந்தா (18ம் இடம்), ரஷ்மிகா (20ம் இடம்) ஆகியோர் விஜய்யை முந்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் அஜித் பெயர் இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.
டாப் 100 லிஸ்ட் இதோ


அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
