விபத்தில் சிக்கிய கோபி.. ஒரே நேரத்தில் ஹாஸ்பிடலில் பாக்யா, ராதிகா! பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரோமோ
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியின் முகத்திரை படிப்படியாக கிழ்ந்துவருகிறது. அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிற உண்மையை தாத்தா அனைவர் முன்னிலையில் போட்டு உடைக்கிறார்.
அதனால் கோபியின் அம்மா போன் செய்து உடனே வீட்டுக்கு வரும்படி கூறுகிறார். உண்மை தெரிந்துவிட்டதோ என்கிற குழப்பத்தில் கோபி கார் ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அவர் விபத்தில் சிக்க, அருகில் இருப்பவர்கள் உடனே ஹாஸ்பிடலில் சேர்கிறார்கள். உங்கள் கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என பாக்யாவுக்கு போன் போகிறது.
அதே நேரத்தில் ராதிகாவுக்கு போன் வர அவருக்கு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. ஹாஸ்பிடலில் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் சந்தித்தால் மொத்த உண்மையும் பாக்யாவுக்கு தெரியவர வாய்ப்பிருக்கிறது.
ப்ரோமோ இதோ..