போச்சு.. பாக்யாவிடம் மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட கோபி: பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பில் உச்சத்தில் இருக்கிறது. கோபியின் இன்னொரு உறவு பற்றி வெற்றில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
பாக்யா வீட்டை விட்டு வெளியேறி தான் வேலை செய்யும் இடத்தில் இருக்கிறார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர பலரும் முயற்சித்தாலும் அவர் வருவதாக இல்லை.
இல்லையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளிவந்திருக்கிறது. அதில் கோபி மீண்டும் ஒரு திட்டம் போடுகிறார். ராதிகா திருமணத்திற்கு ஓகே சொல்லும் வரை காத்திருக்கலாம், தற்போதைக்கு பாக்யாவை எப்படியாவது எப்படியாவது பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என திட்டம் தீட்டுகிறார்.
அதன் படி அவர் பாக்யாவிடம் சென்று பேசுகிறார். "நீங்க மீண்டும் இந்த தப்பை செய்ய மாட்டீங்க என எப்படி நம்புவது, சத்தியம் செய்யுங்க" என பாக்யா கேட்கிறார்.
அப்போது சத்தியம் செய்யும் கோபி "நீதான் என் வழக்கை ராதிகா" என வாய்தவறி கூறிவிடுகிறார். இதை கேட்டு பாக்யா மீண்டும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார்.
ப்ரொமோவை நீங்களே பாருங்க