நான் அப்படி சொன்னேனா?: ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி கோபி கொடுத்த விளக்கம்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. பாக்யா தற்போது கேட்டரிங் தொழிலில் சம்பாதிக்க தொடங்கியிருக்கும் நிலையில், அதில் மேலும் ஜொலிப்பதற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ள கிளாசுக்கு சென்று வருகிறார்.
அங்கு அவருக்கு பழனிச்சாமி என்ற புது கதாபாத்திரத்துடன் அறிமுகம் கிடைக்கிறது. அந்த ரோலில் நடிக்க ரஞ்சித் வந்திருக்கிறார். தொடருக்கு புது ஹீரோ வந்துவிட்டதால் இனி கோபி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குறையும் என அவரே வீடியோயில் பேசி இருந்தார்.
வெளியேறுகிறாரா
தனக்கு இனி காட்சிகள் இருக்காது என கோபி விரக்தியில் பேசிய காரணத்தால் அவர் சீரியலை விட்டு வெளியேறுகிறாரா என கேள்வி எழுந்தது.
அதற்கு தற்போது புது வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார் கோபி சதிஷ். 'கோபி ரோலுக்கு முக்கியத்துவம் குறையலாம் என்று மட்டும் தான் செய்தேன். அதை இப்படி மாற்றி செய்தியாக பரப்பிவிட்டார்கள்' என அவர் கோபமாக கூறி இருக்கிறார்.
தனுஷ் அவரது மகனுடன் எடுத்த செல்ஃபி! இணையத்தில் வைரல்