விஜய் கடைசி படத்தை இயக்க இருந்த தெலுங்கு இயக்குனர்.. ஆனால் நீக்கப்பட்டது ஏன்?
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டார்.
அவரது கடைசி படம் ஹெச் வினோத் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ஜனநாயகன் படம் தான். விஜய் தன் கடைசி படத்திற்காக முதலில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலினேனியை தான் தேர்வு செய்து இருந்தார், ஆனால் திடீரென அந்த படம் டிராப் ஆகிவிட்டது.
கோபிசந்த் மாலினேனி பேட்டி
இந்நிலையில் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி அளித்த பேட்டியில் விஜய் படம் பற்றி பேசி இருக்கிறார். விஜய் நான் சொன்ன கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டார், அதன் பின் படத்தினை அறிவிக்க பணிகளை செய்துவந்த போது தான் அவர் முடிவை மாற்றிக்கொண்டார்."
"கடைசி படம் என்பதால் தெலுங்கு இயக்குனர் வேண்டாம் என பலரும் அவரிடம் வலியிறுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் என்னை வேண்டாம் என விஜய் கூறி இருக்கிறார்" என கோபிசந்த் மாலினேனி தெரிவித்து இருக்கிறார்.

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
