கவுண்டமணி தவறவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படம்..எந்த படம் தெரியுமா ?
கவுண்டமணி
தமிழ் சினிமாவின் டாப் காமெடியனாக இருந்தவர் தான் கவுண்டமணி. இவர் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்தவர்.
தற்போது பல வருடம் கழித்து 'பழனிச்சாமி' வாத்தியார் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
பட வாய்ப்பு
நடிகர் மற்றும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1994 -ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அமைதிப்படை. இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் சத்யராஜ் நடித்திருப்பார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் முழுக்க முழுக்க சமுதாயத்தில் நடந்த பிரச்சனைகளை காமெடியாக கூறியிருப்பார்கள். இன்றளவும் பலரால் இப்படம் கொண்டாடப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நூலிழையில் கவுண்டமணி தவறவிட்டார். இப்படத்தில் மணிவண்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கயிருந்தது கவுண்டமணி தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
