கவுண்டமணி நடித்த காமெடி காட்சியில் வந்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் போட்டோ
கவுண்டமணி
90 மற்றும் 20களில் எத்தனையோ கலைஞர்கள் சினிமாவில் நுழைந்துவிட்டார்கள், மக்கள் மனதிலும் பெரிய இடம் பிடித்துவிட்டார்கள்.
அப்படி இருந்தும் மக்கள் 80களில் கலக்கியவர்களை மறக்காமல் இப்போது நியாபகம் வைத்துள்ளார்கள். அப்படி 80களில் காமெடி நடிகையாகவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் அனுஜா ரெட்டி.
நடிகர் பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான அனுஜா தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். 14 வயதிலேயே சினிமா துறையில் என்ட்ரி கொடுத்த அனுஜா, குரூப் டான்சராக வலம் வந்தார்.
முதல் வசந்தம் என்ற படத்தில் முதலில் நடிக்க தொடங்கிய அனுஜா அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோ
பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனுஜா ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.
இப்போது படங்கள் கமிட்டாகி நடிப்பது இல்லை என்றாலும் இவர் தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார். நிறைய ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இதோ நடிகை அனுஜா தற்போதைய போட்டோ,

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    