அனுமதி இல்லாமல் ஷோ.. திருப்பூர் சுப்ரமணியம் தியேட்டருக்கு நோட்டீஸ்
லியோ படம் வெளியான நேரத்தில் அதன் தயாரிப்பாளர் பற்றி பேட்டி அளித்து சர்ச்சை ஏற்படுத்தியவர் திருப்பூர் சுப்ரமணியம். அதிகம் ஷேர் கேட்டதால் தியேட்டர்கார்களுக்கு நஷ்டம் என அவர் கூறி இருந்தார். மேலும் முதல் காட்சிக்கு அதிக டிக்கெட் விலை வைத்து விற்க சொன்னதாகவும் அவர் கூறி இருந்தார்.
லியோ படத்திற்கு முதல் காட்சி 9 மணிக்கு மேல் தான் தொடங்க வேண்டும் என அரசு விதிமுறைகள் போட்டிருந்தது. விஜய் அரசியலுக்கு வருவதால் திமுக அரசு கொடுக்கும் சிக்கல் இது என விமர்சிக்கப்பட்டது. மேலும் அதிகாலை காட்சிக்கு நீதிமன்றம் சென்றும் அனுமதி கிடைக்கவில்லை.
திருப்பூர் சுப்ரமணியம் தியேட்டருக்கு நோட்டீஸ்
இந்நிலையில் சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் ரிலீஸ் ஆன டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான சக்தி சினிமாஸ் திரையரங்கில் அனுமதி இன்றி காலை 7 மணிக்கும், இரவு 11.50க்கும் ஷோ போடப்பட்டு இருக்கிறது.
இது சர்ச்சை ஆகி இருக்கும் நிலையில் இது பற்றி அரசு தற்போது தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதுக்கு யாராச்சி பதில் சொல்ல முடியுமா இப்போ மட்டும் எப்படி 7am ஷோ அனுமதி கிடைச்சிது யார் கொடுத்தா ??? ?
— RamKumarr (@ramk8060) November 11, 2023
விஜய் படத்துக்கு மட்டும் தான் கட்டுப்பாடா ? pic.twitter.com/fBHXMpzP1G

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
