தீபாவளிக்காக ஜி.பி.முத்து தனது குழந்தைகளுக்கு செய்த விஷயம்- வீடியோவுடன் இதோ
ஜி.பி.முத்து
பிக்பாஸ் 6வது சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி.பி.முத்து. இவர் டிக்டாக் ஆப் மூலம் பிரபலமாக அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.
இதன் மூலமே பிரபலம் ஆன ஜி.பி.முத்து பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இறுதிவரை வருவார் என்று பார்த்தால் 14 நாட்கள் மட்டுமே வீட்டில் தாக்குப்பிடித்தார்.
அதன்பிறகு பணம், புகழ் தேவையில்லை எனக்கு பிள்ளைகள் தான் முக்கியம் என வெளியேறிவிட்டார். வீட்டிற்கு சென்றதும் மருத்துவமனையில் இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட அனைவரும் வருத்தப்பட்டார்கள்.
தீபாவளி வீடியோ
வீட்டிற்கு சென்றுள்ள ஜி.பி.முத்து தீபாவளிக்கு தனது மனைவிக்கு புடவை மற்றும் குழந்தைகளுக்கு நிறைய பட்டாசுகள் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளார்.
அந்த வீடியோவை வெளியிட ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜி.பி.முத்து தீபாவளி கொண்டாட்ட வீடியோ