கலங்கிய ஜிபி முத்து, பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே இப்படி மாறிட்டாரே!
ஜிபி முத்து
இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் ஜிபி முத்து தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவரது பயந்த சுபாவத்தை வைத்து கமல்ஹாசனே நேற்று அவரை கலாய்த்து இருந்தார். ஜிபி முத்து BB வீட்டுக்குள் செல்லும் முன்பு குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார். இதுவரை ஒருநாள் கூட குடும்பத்தை விட்டு பிரிந்தது இல்லை என கூறி இருந்தார் அவர்.
ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜிபி அவரது குடும்பத்தினருக்காக கேமராவில் பேசுகிறார். அதன் பின் அவர் கலக்கத்துடன் பெட்டில் படுத்திருக்கும் போது அவரை மற்றவராகள் பயமுறுத்தி அதிர்ச்சியுடன் எழ வைக்கின்றனர்.
அதன் பின் ஜிபி முத்து மழையில் நனைத்து ஜாலியாக என்ஜாய் செய்வதும் காட்டப்பட்டு இருக்கிறது. மழையில் அவர் குழந்தையாகவே மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.
#Day1 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/UrJgcCNCSx
— Vijay Television (@vijaytelevision) October 10, 2022
மாலத்தீவில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா டேட்டிங்! காட்டிக்கொடுத்த கூலிங் கிளாஸ்