எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. குக் வித் கோமாளியில் எல்லோரும் ஷாக்
குக் வித் கோமாளி 3ம் சீசனில் இருந்து இன்று மிக முக்கிய போட்டியாளர் எலிமினேட் ஆகி இருக்கிறார். இவர் வெளியே போவார் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதனால் ஒட்டு மொத்த CWC செட்டும் கண் கலங்கியது.
இன்று நடந்த எலிமினேஷன் சுற்றில் வித்யூலேகா மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் தான் இருந்தார்கள். கிரேஸ் மிக எளிமையாக பருப்பு போலி செய்தார், ஆனால் வித்யூலேகா வித்யாசமாக கேக், வழைப்பழம் வைத்து வித்யாசமாக ஒரு டிஷ் செய்தார்.
இறுதியில் கிரேஸ் எலிமினேட் ஆனதாக நடுவர் அறிவித்தார். அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆனார்கள். பைனலுக்கு எளிதாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர் இப்படி எலிமினேட் ஆகிவிட்டாரே என பலரும் வெளிப்படையாகவே கூறினார்கள்.
"நான் எலிமினேஷன் சுற்றுக்கு வந்திருக்க கூடாது, அப்படி வந்தால் ஜெயிக்க கூடாது என்று தான் நினைத்தேன். நான் ஜெயித்து, வித்யூலேகா எலிம்னேட் ஆனால் நான் இன்னும் வருத்தப்பட்டு இருப்பேன்" என அவர் கூறிவிட்டு சென்றார்.