குக் வித் கோமாளி பிரபலம் கிரேஸ் கருணாஸின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! அன்ஸீன் போட்டோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக திகழ்ந்து வருபவர் கிரேஸ் கருணாஸ்.
தொடர்ந்து சிறப்பாக சமைத்து அனைவரையும் ஆச்சார்ய படுத்தி வரும் கிரேஸ் கருணாஸ் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிரேஸ் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமண புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
கருணாஸ் அவரின் படத்தில் பணிபுரிந்த கிரேஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். மகன் கென் கருணாஸ் அசுரன் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.