நான் தான் படிக்கல, ஆனால் நான் இதுவரை... இப்படியொரு விஷயத்தை செய்துள்ளாரா பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமாகி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி, வெல்டன், ஆட்டோகிராஃப் என வரிசையாக படங்கள் நடித்து வந்தவர் பிளாக் பாண்டி.
படங்களை தாண்டி சின்னத்திரையிலும் கதை நேரம், மெட்டி ஒலி, கோலங்கள் என நடித்துக் கொண்டிருந்தவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் பெரிய ரீச் கொடுத்துள்ளது.
ஜனனியை தொடர்ந்து பார்கவிக்கு குணசேகரன் வைத்த செக், வீட்டிற்கு வந்த போலீஸ்..எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
அப்போதைய இளைஞர்களிடம் அந்த சீரியல் மெகா வரவேற்பை பெற்றது. பின் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிளான் பாண்டி வசந்த பாலனின் அங்காடித் தெரு படத்தில் நாயகன் நண்பராக நடித்தார்.
அதற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லும்படியாக படங்கள் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்ததில் சாட்டை படம் அவரின் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.

நடிகரின் பேட்டி
தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் பிளாக் பாண்டி பேசும்போது, சினிமாவை பொறுத்தவரை ஒரு காமெடியனாக நிலை பெறுவது மிகவும் கஷ்டமான ஒன்று.

26 வருடங்களாக நான் சினிமாவில் நடிக்கிறேன், நிறைய ப்ளஸ் மைனஸ் உள்ளது என்றவர் தனது அறக்கட்டளை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் 10 பெயில், என்னால படிக்க முடியல என்கிற ஆதங்கத்தில் எனது தங்கையை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்துள்ளேன.
என்னோட உதவும் மனிதம் அறக்கட்டளை மூலம் 4 இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைத்து இருக்கிறேன். நல்ல உள்ளங்களின் உதவியால் இதுவரை 75 பேருக்கு மேல் படிக்க வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
