GTA 5 ரூ. 1 லட்சம் கோடி வருவாய்.. இப்போ GTA 6 ஒரே நாளில் ரூ. 22,000 கோடி வருவாய்.. அடேங்கப்பா!!
GTA 6 revenue till now: நேற்று (நவம்பர் 19) வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6) கேம் ஒரே நாளில் 22,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம் வாங்க.
Rockstar Games
GTA கேம் என்பது விளையாட்டு என்பதை தாண்டி பலருக்கும் அது ஒரு எமோஷனலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக GTA 5 கடந்த 13 ஆண்டுகளாக கேமிங் உலகை ஆண்ட ஒன்று. இதுவரை இந்த கேம் 35 million copies விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த கேம் மீது ரசிகர்கள் காதல் கொண்டுள்ளனர்.

GTA 5-ஐ தொடர்ந்து GTA 6 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு Rockstar Games வெளியிட்டது. அப்போதிலிருந்து இந்த கேம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
GTA 6
உலக அளவில் Gamers அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கேம் என்றால், அது கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6) தான். கடந்த ஆண்டே இந்த கேம் வெளியாகியிருக்க வேண்டிய நிலையில், சில தொழில்நுட்ப விஷயங்கள் காரணமாக தாமதம் ஆனது. அட, எப்போ தாம்பா அந்த கேம்-ஐ வெளியிடுவீங்க என ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகிவிட்டனர்.

ரசிகர்களின் ஏக்கத்தையும், தாமதத்தால் ஏற்பட்ட வருத்தத்தையும் புரிந்துகொண்ட Rockstar Games இந்த ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான முன்பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி, அமோக வரவேற்பையும் பெற்றது. முன்பதிவிலேயே $1.65 billion-ஐ கடந்து பட்டையை கிளப்பியது GTA 6.
22,000 கோடி வருவாய்
இந்த நிலையில், நேற்று நவம்பர் 19-ஆம் தேதி வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6) கேம், இதுவரை சுமார் 2.45 Copies விற்பனை செய்யப்பட்டு, $2.36 billion, அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 22,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 ஆண்டுகளுக்கு முன் வெளியான GTA 5 கேம் $10.78 billion, அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ. 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதாக தரவுகள் கூறுகின்றன. விரைவில் GTA 5 சாதனையை GTA 6 முறியடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.