விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. தற்போது பிரபல சீரியல் நடிகை தான்
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் பல முக்கிய நடிகர்கள் கூட விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர்.
விஜய் தனது 33 வருட சினிமா கெரியரை முடித்துக்கொண்டு இனி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த விழாவில் ஜனநாயகன் தான் கடைசி படம் என்பதை உறுதியாக அறிவித்துவிட்டார் அவர்.

சீரியல் நடிகை
இந்நிலையில் விஜய் உடன் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு உருக்கமாக பேசி இருக்கிறார் பிரபல சீரியல் நடிகை.
சன் டிவி இலக்கியா சீரியல் நடிகை ஹிமா பிந்து தான் அது. விஜய் உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டு அவர் சினிமாவில் இருந்து விலகுவது பற்றி மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.