குலு குலு திரைவிமர்சனம் ?/5
ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை குலு குலு படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
அமேசான் காட்டில் பிறந்த கூகுள் { சந்தானம் } அங்கு ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக தனது தாய்யை இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து இளைஞன் ஆனதும் சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறார் கூகுள். இப்படி சென்றஇடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கும் கூகுளிடம் ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள்.
உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் கூகுள், இந்த பயணத்தில் அந்த இளைஞர்களுடன் இணைந்து அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த பயணத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
வழக்கம் போல் நகைச்சுவை மட்டும் செய்து நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் அதற்க்கு நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவருகிறார். எதார்த்ததுடன் கலந்த செண்டிமெண்ட், சூழ்நிலையை புரிந்துகொண்டு செயல்படும் விதம் என கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகிறார் சந்தானம். இளைஞர்களாக வந்த கவி, ஹரிஷ், யுவராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளார்கள்.
கதாநாயகி அதுல்யா சந்திராவின் நடிப்பு ஓகே. வழக்கம் போல் வில்லனாக ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் பிரதீப் ராவத். மரியம் ஜார்ஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற அணைத்து கதாபாத்திரங்களும் தனித்து காணப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியது.
பல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் கூட, சில நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை. திரைக்கதையில் முதல் பாதி சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி தெறிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம். ஃபிலோமின் ராஜின் எடிட்டிங் பக்கா.
க்ளாப்ஸ்
சந்தானத்தின் நடிப்பு
ரத்தாகுமாரின் இயக்கம்
இரண்டாம் பாதி
கிளைமாக்ஸ்
பல்ப்ஸ்
முதல் பாதி
சில இடங்களில் ஒர்கவுட் ஆகாத நகைச்சுவை
மொத்தத்தில் சந்தானத்தின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது 'குலு குலு'..
2.75 / 5
முதல் நாளில் படு மோசமான வசூலை பெற்ற தி லெஜண்ட் திரைப்படம்- முழு விவரம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu
