கங்குவா நடிகை திஷா பாட்னி வீட்டின் மீது துப்பாக்கி சூடு! அதிர்ச்சி சம்பவம்
சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் திஷா பாட்னி. ஹிந்தி சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார் அவர்.
உத்தர பிரதேசத்தின் பரேலியில் இருக்கும் திஷா பாட்னியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தற்போது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காரணம்
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு சமூக வலைதள பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
திஷா பாட்னி சாதுக்கள் Premanand Maharaj மற்றும் Aniruddhacharya Maharaj ஆகியோரை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். மேலும் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதால் இப்படி செய்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது ட்ரெய்லர் மட்டும் தான் எனவும் கூறி இருக்கின்றனர். போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில் அந்த சமூக வலைதள பதிவு மேற்கொண்டவர்கள் தான் தாக்குதல் நடத்தினார்களா என விசாரித்து வருகின்றனர்.



ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
