மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
எதிர்நீச்சல் சீரியல்
பல வருடங்களாக தனது தந்தைக்கு திதி கொடுக்கவில்லை என்பதால், அனைவரையும் ஒன்று சேர்த்து திதி கொடுக்க ஆதி குணசேகரன் முடிவு செய்தார்.

அதன்படி, சக்தி - ஜனனி, ரேணுகா - ஞானம் மற்றும் நந்தினி - கதிர் ஆகியோர் திதி கொடுக்கும்போது திடீரென ஜனனி வாந்தி எடுத்தார். அதன்பின்தான் தெரியவந்தது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று.

அவர் கர்ப்பமாக இருந்தாலும், மிகவும் பலவீனமாக இருக்கிறார் என மருத்துவர் கூறியது சக்திக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின், மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு ஜனனி மற்றும் சக்தி வீட்டிற்கு வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்
இந்த நேரத்தில், தான் செய்த விஷயங்களால் யாராவது காயப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என ஆதி குணசேகரன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

எப்போதுமே அனைவரையும் அடக்கி ஆளவேண்டும் என்கிற தோரணையில் பேசும் குணசேகரன் தற்போது இப்படி பணிவாக பேசுகிறாரா, இதனால் கண்டிப்பாக இதன்பின் மிகப்பெரிய சதி இருக்குமோ என ஜனனி யோசிக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu