எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம்
ஆதி குணசேகரனின் திட்டம்
ஜீவானந்தம் மற்றும் பார்கவி இறக்கவில்லை என ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துவிட்டது. இதனால் தன்னிடம் உள்ள அடியாட்களை அனுப்பி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும் ஜீவானந்தம் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே முடித்துவிட வேண்டும் என கூறுகிறார் குணசேகரன்.
அடுத்து நடக்கவிருப்பது
ஜீவானந்தம் மற்றும் பார்கவிக்கு துணையாக ஜனனி இருக்கும் நிலையில், இவர்கள் மூவரையும் பின்தொடர்ந்து வருகிறார்கள் குணசேகரனின் அடியாட்கள்.
இந்த சமயத்தில், நந்தியிடம் கூறி தர்ஷனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியே அழைத்து வரும்படி தயாராக இருக்க சொல் என ஜனனியிடம் ஜீவானந்தம் கூறுகிறார்.
ஒரு பக்கம் மண்டபத்தில் திருமண வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தன்னை கொலை செய்ய ஒரு கூட்டம் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில் தர்ஷனை எப்படி மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து, பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை ஜீவானந்தம் நடத்தி வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.