திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் திருமணம் யாருடன் நடக்க போகிறது என்பது தான் தற்போது பெரிய கேள்விக்குரியாக இருந்து வருகிறது.
ஆதி குணசேகரன் திட்டமிட்டது போல அன்புக்கரசி உடன் நடக்குமா, அல்லது ஜனனி நினைப்பது போல பார்கவியை மண்டபத்துக்கு கூட்டி வந்து அவருடன் திருமணத்தை நடத்துவாரா என கதை பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் ப்ரோமோ
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ஜனனி தான் பார்கவி உடன் மண்டபத்துக்கு வர தாமதம் ஆனால் அங்கிருந்து தர்ஷன் உடன் வெளியேறிவிடுங்கள் என சொல்கிறார்.
மறுபுறம் குணசேகரன் மனைவியை தாக்கிய வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார் அறிவுக்கரசி உடன் இருக்கும் ஆள். பணம் எல்லாம் கொடுக்க முடியாது, முடிந்தால் வெளியிட்டு கொள் என குணசேகரன் கூறுகிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.
அதனால் இந்த பரபரப்புக்கெல்லாம் முடிவு.. அந்த வீடியோவால் குணசேகரன் கைதாகி, அதன் பிறகு ஜனனி திட்டமிட்டது போல பார்கவி - தர்ஷன் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.