வாய்ப்பு கொடுத்து ஏமாத்திட்டாங்க.. ரோட்டில் அழுதுகொண்டே போனேன்: நடிகர் குண்டு கல்யாணம் எமோஷ்னல் பேட்டி
நடிகர் குண்டு கல்யாணம் காமெடியனாக ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். அவரது உருவத்தை வைத்தே பல காமெடிகள் இருக்கும்.
அவர் தற்போது சினிமாவில் நடிக்காமல் இருக்கும் நிலையில் ஒரு அரசியல் மேடையில் கீழே விழுந்ததபோது மற்றவர்கள் மிதித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்.
ஏமாத்திட்டாங்க..
தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் பற்றி பேசிய அவர், 'ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகி ஷட்டிங் சென்று இருந்தேன். அங்கு இருக்கும் என்னை நடிக்க அழைக்கவே இல்லை. அப்போது தான் எனக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என ஒருவர் சொன்னார்.'
'அதை கேட்டு அதிர்ச்சி ஆகி.. அழுதுகொண்டே அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்தேன்' என குண்டு கல்யாணம் சொல்லி இருக்கிறார்.
அவரது முழு பேட்டி இதோ
விஜய்யை இயக்க மறுத்தேன்.. இப்போ அவர் நம்பர் 1 ஹீரோ! - காரணத்தை சொன்ன பாரதிராஜா