நடிகர் தனுஷிற்கு நிகர் நானா? ஜீ.வி.பிரகாஷ் சொன்ன அதிரடி பதில்
ஜீ.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
அதிரடி பதில்
இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஜிவி பிரகாஷ் தனுஷ் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் இசையமைப்பாளராக பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்தில் இருக்கிறேன். நடிப்பில் நண்பர் தனுஷ்க்கு நிகராக என்னால் ஈடுகொடுக்க முடியாது. நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri
