தனுஷின் மாறன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட தகவல்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ள படம் மாறன்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் ஜிவி பிரகாஷ் கொடுத்திருந்தார். " மாறன் இசை வேலைகள் கடைசி கட்டத்தில் உள்ளன. படத்தில் நான்கு பாடல்கள், தீம் மியூசிக்கும் உண்டு " என குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவலுக்கு பிறகு, மாறன் படத்தை குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜிவி. அதில், " மாறன் பின்னணி இசை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆக்ஷன் நிறைந்த பின்னணி இசையாக இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Maaran update …. BGScore starts today … will be an action packed score …. @dhanushkraja @karthicknaren_M @SathyaJyothi_ @MalavikaM_
— G.V.Prakash Kumar (@gvprakash) December 11, 2021