சூர்யாவின் 46வது படம் எப்படிபட்ட கதையாக இருக்கும்... ஜி.வி.பிரகாஷ்
சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கி கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சூர்யாவுடன், மமிதா பைஜு முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை.
தரமான அப்டேட்
அண்மையில் ஒரு பேட்டியில் சூர்யாவின் 46வது படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, இது ஒரு நல்ல பொழுதுபோக்கான ஃபேமிலி டிராமா படம், மிகவும் அருமையாக வந்துள்ளது.
இப்படம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலூ படத்தின் சாயலில் சூர்யா சாருக்கு இந்தப் படம் இருக்கும் என கூறியுள்ளார்.
