விரைவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி விவாகரத்து பெறுகிறார்களா?- ஷாக்கிங் தகவல்

By Yathrika May 12, 2024 11:30 AM GMT
Report

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். சங்கீதம் பயின்ற இவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுக்க அஜித்தின் கிரீடம், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், குசேலன், காளை, தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகி 17 வருடங்களுக்கு பிறகு சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வாங்கினார்.

அப்படியே கடந்த 2015ம் ஆண்டு டார்லிங் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் தொடர்ந்து படங்கள் நடிக்கிறார்.

விரைவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி விவாகரத்து பெறுகிறார்களா?- ஷாக்கிங் தகவல் | Gv Prakash And Saindhavi Gonna Divorce Soon

மனோஜ் பேசியதை ரெக்கார்ட் செய்து செக் வைத்த முத்து, மாஸ் தான்- சிறகடிக்க ஆசை இந்த வார புரொமோ

மனோஜ் பேசியதை ரெக்கார்ட் செய்து செக் வைத்த முத்து, மாஸ் தான்- சிறகடிக்க ஆசை இந்த வார புரொமோ

குடும்பம்

ஹீரோ, இசையமைப்பாளர் என பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அன்வி என்கிற பெண் குழந்தை பிறந்தது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சேர்ந்து நிறைய ரொமான்டிக் பாடல்கள் எல்லாம் கொடுத்துள்ளார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாக வதந்தி இணையத்தில் பரவி வருகிறது, எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இதற்கு தம்பதிகள் முற்றுபுள்ளி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. 

விரைவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி விவாகரத்து பெறுகிறார்களா?- ஷாக்கிங் தகவல் | Gv Prakash And Saindhavi Gonna Divorce Soon

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US