ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என தெரிகிறதா!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் இசையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக ராமாயணா திரைப்படம் உருவாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
இதை தவிர பெத்தி, மூன் வாக், Tere Ishk Mein உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆகும். அப்படிதான் தற்போது பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான டாப் நட்சத்திரத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ்
ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என பலரும் கேட்டு வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான். ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகனும் திரையுலக நட்சத்திரமுமான ஜி.வி. பிரகாஷின் சிறு வயது புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பின் மதராசபட்டினம், தலைவா, கிரீடம், டார்லிங், தெறி, அசுரன், ராஜா ராணி என பல ஹிட் திரைப்படங்களை தனது இசையில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
