ஜி.வி பிரகாஷுக்கு புதிய பட்டம் கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி.. என்னவென்று தெரியுமா
கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
இதன்பின், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார்.
அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
இது குறித்து ஜி.வி. பிரகாஷ் பதிவு ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செய்திருந்த இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷுக்கு ‘வெற்றித்தமிழன்’ என்ற புது பட்டத்தை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’, உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ ஆகிய பட்டங்களை கொடுத்ததும் சீனு ராமசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.