ஜி.வி. பிரகாஷின் ஃபேண்டஸி திரைப்படமான கிங்ஸ்டன் OTT ரிலீஸ்.. எப்போது பாருங்க
கிங்ஸ்டன்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கிங்ஸ்டன். இப்படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார்.
இது ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாகும். இப்படத்தில் இவருடன் இணைந்து திவ்யபாரதி, இளங்கோ குமரவேல், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஃபாண்டஸி ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
OTT ரிலீஸ்
இந்நிலையில், ஃபேண்டஸி கதைக்களம் உள்ள இந்த திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி ZEE5 OTT தளத்தில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.