கவின்குமாருக்கு குரல் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ்! அஜித்துக்கு வாய் கூட திறக்காதது ஏன் என கேட்கும் நெட்டிசன்கள்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவான விஷயங்கள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்.
சமீபத்தில் நெல்லையில் கௌரவ கொலை செய்யப்பட்ட கவின் குமார் பற்றி தற்போது ஜீ.வி.பிரகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.
"தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
"Rest in peace #kavinkumar" என ஜீ.வி.பிரகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.
அஜித்துக்கு நடந்தபோது எங்கே போனீங்க
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் தைரியமாக பேசியதற்காக பாராட்டி இருக்கின்றனர்.
சமூகம் மீது அக்கறை கொண்ட முதுகெலும்புள்ள கலைஞன் @gvprakash 👏👏
— Nanban (@YourNanban) July 29, 2025
ஆனால் பலரும் 'அஜித் குமாரை போலீசார் அடித்து கொன்றபோது நீங்கள் எதுவுமே பேசாதது ஏன்' என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தம்பி.... திருபுவனம்'ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில இருக்கு தெரியுமா...?
— LeelaKrishnan (@leelacbe) July 29, 2025
அந்த ஊரில் அஜித்குமார்'ன்னு ஒருத்தருக்கு என்ன நடந்தது'ன்னு தெரியுமா...?
இப்ப மட்டும் எப்படிடா திடீர் பொங்கல் வைக்கறீங்க...🤧💦💨🤦🏻
அஜித்குமார் னு ஒருத்தர் போலீசால் அடித்து கொல்லப்பட்டாரே அப்போ கோமாவில் இருந்தீங்களா ப்ரோ..
— சதீஷ் (@visa_20170524) July 29, 2025
பயம் ஆளுங்கட்சி மேல் உள்ள பயம்.
மூடிட்டு இருந்தா எல்லா விடயத்திற்கும் மூடிட்டு இருங்க ப்ரோ.. வாயை..
தம்பி நீங்க ஜெயராஜ் பெனிக்ஸ் போலீஸ் அடிச்சி கொன்னதுக்கு பொங்கினீங்க. அதற்கு அப்புறம் இப்பத்தான் பார்க்கிறேன். இவ்வளவு நாள் கோமாவுல இருந்தீங்க போல? ஏன் அஜித்குமார் னு ஒரு பையன அடிச்சே கொன்னானுகளே. அதுக்கு கூட வாய் திறக்கவில்லை. அறிவாலய கொத்தடிமை கதாநாயகர்களே!
— ஆனந்த் (@ant58747946833) July 29, 2025

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
