விவாகரத்துக்கு பிறகும் சைந்தவி உடன் பணியாற்றுவது ஏன்? ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த பதில்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ்.
அவர் பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டு 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் திடீரென விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தனர்.
அவர்கள் பிரிந்துவிட்ட நிலையிலும் ஜீ.வி.பிரகாஷ் வெளிநாட்டில் நடத்தும் கச்சேரிகளில் சைந்தவி வந்து பாடல்கள் பாடுகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.
ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த பதில்
விவாகரத்துக்கு பிறகும் ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக பணியாற்றுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் அது ஏன் என ஜீ.வி.பிரகாஷே பதில் அளித்து இருக்கிறார்.
"நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்" என ஜீ.வி கூறி இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
