உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.. ரகசியத்தை உடைத்த ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்
குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இசையமைப்பது, நடிப்பது என பிஸியாக வலம் வரும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை கச்சேரியில் தனது முன்னாள் மனைவியும், பாடகியுமான சைந்தவியுடன் கலந்துகொண்டு பாடினார்.
அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஜிவி பிரகாஷ் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் பேட்டி
அதில், " காதல் படத்துக்கு முதலில் நான் தான் இசையமைக்க வேண்டி இருந்தது. அப்போது பாலாஜி சக்திவேல் சார் என்னிடம் நீங்கள் கஷ்டப்பட்டு மேலே வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் நான் இல்லை என்று பதிலளிக்க அவர் அப்செட் ஆகிவிட்டார். இதனால் அந்த படத்திற்கு என்னால் இசையமைக்க முடியவில்லை. நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதன் காரணமாக தான் அவ்வாறு சொன்னேன்" என்று கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
