யார் அந்த 4 பேர்.. தனுஷுக்கு துரோகம் செய்யவே மாட்டேன் என சொன்ன ஜீ.வி.பிரகாஷ்
தனுஷ் மற்றும் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் சமீப காலமாக வரும் பாடல்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன. வாத்தி படத்திற்காக அவர் தேசிய விருதும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைத்து உள்ளார்.
நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடந்தது. அதில் ஜீ.வி.பிரகாஷ் கலந்துகொண்டு மேடையில் ஒரு விஷயம் பற்றி மறைமுகமாக பேசினார்.
யார் அந்த 4 பேர்?
துள்ளுவதோ இளமை 2ம் பாகத்தை தனுஷ் இயக்கினால் அதில் நான் நடிக்க ரெடி. ஆனால் அவருக்கு துரோகம் செய்யும் கேரக்டரில் நடிக்க மாட்டேன். ராயன் படத்தில் அதனால் தான் நான் நடிக்கவில்லை.
அந்த நான்கு பேரில் ஒருவனாக நான் இருக்க மாட்டேன் எனவும் ஜீ.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
தனுஷுக்கு நெருக்கமாக இருந்து அதன் பின் தற்போது எதிரிகளாக சில பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுவது எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த லிஸ்ட் பற்றி தான் ஜீ.வி.பிரகாஷ் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.