சர்ச்சை நடிகையுடன் கூட்டணி சேர்ந்த ஜீவி பிரகாஷ்! போட்டோவுடன் இதோ
நடிகர், இசையமைப்பாளர் என ஒரே நேரத்தில் இரண்டு ட்ராக்கிலும் பயணித்து வருகிறார் ஜீவி பிரகாஷ். அவர் நடிப்பில் கடந்த மாதம் ஐங்கரன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக், அருண் விஜய்யின் யானை, கார்த்தியின் சர்தார், சூர்யா - பாலா படம், வாடிவாசல் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷ் பாலிவுட் நடிகை கங்கனா உடன் கூட்டணி சேர்ந்து.இருக்கிறார். அவருடன் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் தான் ஒரு பிரம்மாண்ட படத்திற்காக அவருடன் கூட்டணி சேர போவதாக தெரிவித்து இருக்கிறார்.
அவர் அந்த படத்திற்கு இசையமைக்கிறாரா, அல்லது நடிக்கிறாரா என்பதை குறிப்பிடவில்லை.
பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர்போன கங்கனாவின் முந்தைய படமான Dhaakad மிகப்பெரிய தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. சில தினங்களிலேயே அந்த படத்தை தியேட்டர்களில் இருந்து நீக்கிவிட்டனர். அதனால் 90 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மொத்த முதலீடும் நஷ்டம் ஆனது.
மறைந்த நடிகை மனோரமாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu