STR - GVM கூட்டணியில் இளம் மலையாள நடிகர்...யார் தெரியுமா ?

Simbu Gautha Menon
By Jeeva Nov 14, 2021 07:10 AM GMT
Report

தமிழில் பிரபலமான இயக்குனராக அதுவும் இளைஞர்கள் மத்தியில் favourite இயக்குனராக அறியப்படுபவர் கவுதம் வாசுதேவ் மேனன்.

காக்க காக்க, மின்னளே, வேட்டையாடு விளையாடு,வாரணம் ஆயிரம் போன்ற பிளாக் பஸ்டர் படங்ககளை இயக்கி தனக்கென தனி டைரெக்க்ஷன் ஸ்டைலயே தமிழ் சினிமாவில் உருவாக்கியவர். 

இவர் இயக்கத்தில் கடைசியாக குட்டி ஸ்டோரி என்னும் ஆந்தோலஜி படம் கடந்த பிப்ரவரியில் வெளிவந்திருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம், சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு படங்களை இயக்கி வருகிறார் கவுதம்.

இந்நிலையில் தான் STR GVM காம்போவில் உருவாகிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படம் குறித்த மற்றோரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே படத்தின் first look போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான நீரஜ் மாதவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இது மேலும் ரசிகர்களை உற்சாக படுத்தும் செய்தியாக பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

STR - GVM கூட்டணியில் இளம் மலையாள நடிகர்...யார் தெரியுமா ? | Gvm Str Vtk Movie Act


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US