ஜெய் பீம் படத்தை விமர்சனம் செய்த ஹச். ராஜா.. இது இலவச ப்ரோமோஷனா

suriya h raja jai bhim
By Kathick Nov 03, 2021 06:45 PM GMT
Report

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படம் இருளர் சமூகத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் Lijomol Jose, மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் என பலரும் நடித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் தற்போது வரை சிறந்த விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

முதல்வர் ஸ்டாலின், கமல் ஹாசன் என தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இப்படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், BJP கட்சியை சேர்ந்த ஹச். ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் தவறாக விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் " நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இது என்ன ஜெய் பீம் படத்திற்காக ஹச். ராஜா செய்யும் இலவச ப்ரோமோஷனா என கலாய்த்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US