வலிமையில் காதல் காட்சிகளே இல்லை, படப்பிடிப்பு இனி நடக்குமா என்றே அஞ்சினோம், உண்மையை உடைத்த வினோத்
வலிமை தல அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்துவிடாதா என்று ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வலிமை படம் குறித்து ஒரு வார இதழுக்கு இயக்குனர் வினோத் இன்று பேட்டியளித்துள்ளார், அதில் பல சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
இதில் குறிப்பாக படத்தில் அஜித்திற்கும் ஹுமாவிற்கும் காதல் காட்சிகளே இல்லை, கொரொனாவிற்காக கதையில் சில மாற்றங்களை செய்தோம், அதனால், காதல் காட்சிகள் எல்லாம் மாற்றி அஜித்தின் தோழியாக ஹுமாவின் கதாபாத்திரத்தை மாற்றினோம்.
அதோடு கொரொனா தொடங்கியதும் 3 முக்கியமான நடிகர்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்கள், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பல பிரச்சனைகள் இனி படப்பிடிப்பு தொடங்குமா என்ற நிலை இருந்தது, ஆனால், முதல் அலை முடிந்ததும் மெல்ல ஒவ்வொரு பிரச்சனைகளைகாக தீர்த்து, கதையில் சில மாற்றங்களை செய்து படப்பிடிப்பை ஒரு வழியாக முடித்தோம் என்று வினோத் கூறியுள்ளார்.