விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்...
நூறு சாமி
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் நூறு சாமி.
இதில் சுவாசிகா நாயகியாக நடிக்க கருணாஸ், லிஜோ மோல், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்துள்ளார்.
வரும் மே 19ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது, படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் கூடியுள்ளது.

எச்.வினோத்
டிரைலரை பார்க்கும் போது இப்படம் தாய் பாசத்தை பற்றி பேசும் படமாக இருக்கும் என தெரிகிறது.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தற்போது இப்படத்தை இயக்குனர் எச். வினோத் பார்த்துள்ளார்.
படம் குறித்து அவர், இப்போது தான் நூறு சாமி படத்தை பார்த்தேன், மிகவும் அருமையான படம், இந்த வருடத்தின் சிறந்த படம் என்பேன். கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்கக் கூடிய திரைப்படம் என கூறியிருக்கிறார்.

பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan