தளபதி 69 படம் இயக்குகிறேன்.. மேடையில் அறிவித்த ஹெச்.வினோத்! ஆனால் கதையில் ட்விஸ்ட்
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து இருக்கிறார். படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
அடுத்து விஜய் தனது கடைசி படமான தளபதி69ல் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் களமிறங்க இருக்கிறார். அதனால் அடுத்து படங்கள் நடிக்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

உறுதி செய்த ஹெச்.வினோத்
இந்நிலையில் இயக்குனர் ஹெச்.வினோத் இன்று ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விஜய் உடன் கூட்டணி சேர்வது பற்றி கேட்கப்பட்டது . அதற்கு அவர் தளபதி69 படம் இயக்குவதை உறுதி செய்தார்.
மேலும் விஜய் இது அரசியல் படம் அல்ல, கமர்ஷியல் படம் தான் என அவர் கூறி இருக்கிறார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri