அடுத்து ஹெச்.வினோத்துடன் இணையும் டாப் நடிகர் யார் தெரியுமா?.. மாஸ் கூட்டணி
ஹெச். வினோத்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத்.
இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக ஹெச். வினோத் - விஜய் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. இதனால், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மாஸ் கூட்டணி
இந்நிலையில், ஹெச். வினோத் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, துணிவு படத்தை முடித்த கையோடு தனுஷிடம் வினோத் ஒரு கதையின் அவுட் லைனை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். தற்போது, விஜய் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் தனுஷ் பட கதையின் பணிகள் தாமதமாகி உள்ளது.
எனவே ஜன நாயகனை முடித்த கையோடு தனுஷிடம் சொன்ன கதைக்கு வினோத் வேலை பார்ப்பார் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
