விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட்
ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது.
முதல் முறையாக ஹெச். வினோத் - விஜய் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் இதுவே விஜய்யின் கடைசி படமாகும்.
மாஸ் கூட்டணி
விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஹெச் வினோத் ரஜினியுடன் இணைந்து பணிபுரியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளாராம் ஹெச். வினோத்.
அந்த கதை ரஜினிக்கும், அவரது மகள் சௌந்தர்யாவிற்கு பிடித்துவிட்டதாம். ஆகையால் ஜெயிலர் 2 படத்திற்கு பின், கண்டிப்பாக ரஜினியின் படத்தை ஹெச் வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.
அதே போல் வீர தீர சூரன் பட இயக்குநர் அருண் குமாரும் சமீபத்தில் ரஜினிக்கு கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
