வசூலில் வெற்றி பெரும் படங்கள் எல்லாம் சிறந்த படமில்லை.. வெளிப்படையாக பேசிய இயக்குனர் எச். வினோத்
எச். வினோத்
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எச். வினோத். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை, வலிமை,துணிவு, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற நல்ல படங்களை கொடுத்து சினிமாவில் பிரபலமானார்.

இந்த நிலையில், இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட எச். வினோத் அங்கு படத்தை பற்றிய சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
எச். வினோத் பேச்சு
அதில், பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக வெற்றி அடையும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை, எந்த படம் வெளிவந்து மக்கள் மற்றும் சமூகத்தில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில், நந்தன் சிறந்த படமாக அமைந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

தற்போது, எச். வினோத் தளபதி விஜய்யின் 69 - வது படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை புகழ்பெற்ற கன்னட திரைப்பட நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri