மீண்டும் அஜித்துடன் இணையும் சூப்பர்ஹிட் இயக்குனர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா

By Kathick Dec 11, 2023 07:00 AM GMT
Report

நடிகர் அஜித்

அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் கண்டிப்பாக அவருடன் இணைந்து தொடர்ந்து பல படங்கள் பண்ணுவார். சிறுத்தை சிவா மற்றும் ஹெச். வினோத் உள்ளிட்ட இயக்குனர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

மீண்டும் அஜித்துடன் இணையும் சூப்பர்ஹிட் இயக்குனர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா | H Vinoth To Again Join Hands With Ajith Kumar

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன்பின் மீண்டும் ஹெச். வினோத்துடன் அஜித் இணைவாரா என கேள்வி எழுந்தது.

அன்னபூரணி, பார்க்கிங், கான்ஜுரிங் கண்ணப்பன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்.. வசூல் விவரம்

அன்னபூரணி, பார்க்கிங், கான்ஜுரிங் கண்ணப்பன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்.. வசூல் விவரம்

மீண்டும் இணையும் கூட்டணி

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீண்டும் அஜித் - ஹெச். வினோத் கூட்டணி இணைய முயற்சிகள் நடந்து வருகிறதாம். துணிவு படத்தை முடித்த கையோடு கமலின் 233வது படத்தை தான் ஹெச். வினோத் இயக்குவதாக இருந்தார். அதற்கான வேலைகள் தான் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மீண்டும் அஜித்துடன் இணையும் சூப்பர்ஹிட் இயக்குனர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா | H Vinoth To Again Join Hands With Ajith Kumar

ஆனால், இப்படம் எப்போது தான் துவங்கும் என்ற சந்தேகம் இயக்குனர் ஹெச். வினோத்திற்கே தற்போது வந்துவிட்டதனால், கமல் 233வது படத்தை தற்போதைக்கு ஹெச். வினோத் இயக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்.

மீண்டும் அஜித்துடன் இணையும் சூப்பர்ஹிட் இயக்குனர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா | H Vinoth To Again Join Hands With Ajith Kumar

இதனால் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துவிட்டாராம். யோகி பாபு, தனுஷ் ஆகிய நட்சத்திரங்களிடம் ஏற்கனவே கதை கூறி படம் இயக்க தயாராக இருந்தார் ஹெச். வினோத். ஆனால் அவர்களுடைய கால்ஷீட் தற்போது கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் அஜித்துடன் இணைய முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளாராம் ஹெச். வினோத். அஜித் தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 63வது படத்தில் நடிக்கவுள்ளார்.

மீண்டும் அஜித்துடன் இணையும் சூப்பர்ஹிட் இயக்குனர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா | H Vinoth To Again Join Hands With Ajith Kumar

இதனால் உடனடியாக ஹெச். வினோத்துடன் கைகோர்க்க அஜித்தால் முடியாது என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US