அஜித்தை தொடர்ந்து முதல் முறையாக விஜய்யுடன் கைகோர்க்கும் இயக்குனர் எச். வினோத்.. செம மாஸ் கூட்டணி
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் இணைந்த கூட்டணி அஜித் - எச். வினோத்.
இப்படத்தின் போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் வலிமை படத்தில் அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அமைந்தது.
கடந்த 24ஆம் தேதி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் மீண்டும் AK 61 படத்திற்காக மீண்டும் அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில், AK 61 படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி கைகோர்க்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக விஜய் சேதுபதியுடன், எச். வினோத் கூட்டணி அமைக்கவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.